Monday, 23 October 2017

ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!

சூரிய குடும்பம்
சூரிய குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் உள்ளன. நாம் நமது சூரிய குடும்பத்தைப் பற்றிப் பார்ப்போம். சூரியனை மையமாக வைத்து எல்ல கிரகங்களும் சுற்றி வருகின்றன.




இந்த கிரகங்களில் சிலவற்றிற்கு உப கிரகங்கள் உண்டு. அவையாவன :

1. பூமி - சந்திரன்

2. செவ்வாய் - 2 உப கிரகங்கள்

3. குரு - 16 உப கிரகங்கள்

4. சனி - 20-க்கும் மேற்பட்டவை

5. யுரேனஸ் - 15 கிரகங்கள்

6. நெப்டியூன் - 8 கிரகங்கள்

7. புளூட்டோ - 1 கிரகம்


சந்திரனைத் தவிர மற்ற உப கிரகங்களையெல்லாம் நாம் படத்தில் காட்டவில்லை. சூரியன் தன் புவியீர்ப்பு சக்தியினால் எல்லா கிரகங்களையும், உப கிரகங்களையும் தன்னைச் சுற்றி வரும்படி செய்கிறது.

கிரக தூரங்கள்:
சூரியன் நம் பூமியிலிருந்து சுமார் 15, 00, 00, 000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த தூரத்தைத்தான் ஒரு Astronomical Unit (AU) என்று அழைக்கிறோம். இதேபோல் புதன், சூரியனில் இருந்து 0.39 AU தூரத்திலும், சுக்கிரன் 0.72 AU தூரத்திலும், செவ்வாய் 1.52 AU தூரத்திலும், குரு 5.2 AU தூரத்திலும், சனி 9.54 AU தூரத்திலும் இருக்கின்றார்கள். நாம் நமது வாசகர்களுக்கு ஒரு சிறிய சந்தேகத்தைத் தீர்க்க இருக்கிறோம். மேலே காட்டியுள்ள படத்தில் சூரியனை மையமாக வைத்து எல்லா கிரகங்களும் சுற்றி வருகின்றன என எழுதி இருக்கின்றோம். ஆனால் நமது பாடங்களில் சூரியன், சித்திரை மாதம் மேஷத்திலும், வைகாசிமாதம் ரிஷபத்திலும், சஞ்சாரம் செய்வதாக எழுதியுள்ளோம். அதாவது ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சூரியன் சஞ்சாரம் செய்வதாக எழுதி இருக்கின்றோமே! சூரியன் நிலையாக ஓரிடத்தில் இருக்கிறதா? அல்லது அதுவும் மற்ற கிரகங்களைப்போல் சஞ்சாரம் செய்கின்றதா? இதுதான் இப்போதைய சந்தேகம்.

நாம் பூமியில் இருக்கின்றோம். பூமி சுற்றுவது நமக்குத் தெரியவில்லை. இங்கிருந்து பார்க்கும்போது சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றுவதுபோல் தெரிகின்றன. இது ஒரு தோற்றம்தான். இந்தத் தோற்றத்தை நாம் Geo-Centric என்று அழைக்கிறோம். இதன் அடிப்படியில்தான் நமது பஞ்சாங்கங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதனால்தான் சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றிவதுபோல் பஞ்சாங்கங்களில் கணிக்கப் படுகின்றன. மேலை நாட்டவர்கள் தயாரிக்கும் Ephemeris களிலும் இந்த Geo-Centric முறைதான் பின்பற்றப் படுகிறது.

சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன அல்லவா? இந்த நிலைக்கு Helio-Centric என்று பெயர். கிரேக்க மொழியில் “Helio” என்றால் சூரியன் எனப் பொருள்.

ராகு - கேதுக்கள்:
இவை சாயாக் கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள். இவைகளுக்கு உருவம் கிடையாது. பூமியைச் சூரியன் சுற்றுவதாகத் தெரிகின்றது அல்லவா? அந்த நீள் வட்டப் பாதைக்கு ஆங்கிலத்தில் Ecliptic எனப் பெயர். அதன் தமிழ்ப் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்திலேயே அழைப்போம். சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது அல்லவா? இவ்வாறு சுற்றி வரும்போது இந்த Ecliptic என்று கூறப்படுகின்ற சூரியப் பாதையை இரண்டு இடங்களில் சந்திக்கிறார். சந்திக்கும் இந்த இரண்டு புள்ளிகள்தான் ராகு, கேதுக்கள். இதை நாம் படத்தில் போட்டுக் காட்டியுள்ளோம். இப்படம் ராகு, கேதுக்களைப் பற்றிய எண்ணங்களைத் தெளிவாக்கும் என எண்ணுகிறோம்.



சந்திரன் தன் பாதையில் முன்னேற முன்னேற ராகு, கேதுக்கள் பின் நோக்கிச் செல்கின்றன. ராகு, கேதுக்களுக்கு இடையில் உள்ள தூரம் எப்போதுமே 180 பாகைகள்.

இவை ஒரு ராசியைக் கடக்க சுமார் ஒண்ணறை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இவைகளின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, வேறுபடுகின்றன. முதலில் இவைகளின் நிலையைத் தோராயமாகக் கணிக்கிறார்கள். இந்த நிலைக்கு ஆங்கிலத்தில் “Mean Position” என்று பெயர். இவ்வாறு அவைகளின் நிலையை ஓரளவு கணித்தபின் அவைகளைத் திருத்தம் செய்கிறார்கள். இவ்வாறு திருத்தப் பட்டதற்கு “True Position” என்று பெயர். இந்த “True Position” தான் ஜோதிடத்திற்குத் தேவை. அந்த நிலையைத் தான் ஜோதிடர்கள் உபயோகப் படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment