Celestial Sphere (ஆகாயக் கோளம்):
நாம் பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? ஒரு பாதிக் கோளத்தை பூமியின் மேல் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இரவில் பார்த்தால் இருட்டாக மற்றொறு கோளத்தைக் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இந்த அரைக் கோளத்திற்குள் சந்திரன், மற்றும் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை இருக்கின்றன. இந்த இரு அரைக் கோளத்தையும் சேர்த்தால் ஒரு முழு வட்டம், பூமிக்குமேல் இருப்பதுபோல் தெரிகிறது. இந்தக் கோளமானது ஒரு கற்பனைதான். உண்மையில் இல்லை. இந்தக் கற்பனைக் கோளத்திற்குள்தான், நாம் கிரகங்கள் சுற்றுவதையும், அவைகளின் வேகத்தையும் கணக்கிட வேண்டும். பகலில் சூரியன், பூமியைச் சுற்றுவது போலவும், இரவில் சந்திரன் மற்றும் பிற கிரகங்கள் சுற்றுவது போலவும்தோற்றமளிக்கின்றன. நாம் பூமியில் இருப்பதால், இங்கிருந்து அவை எப்படி, எவ்வாறு சுற்றுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குமேல் தெரியும் இந்தக் கோளத்திற்கு Celestial Sphere - "ஆகாயக் கோளம்" எனப் பெயர். இந்தக் கோளத்திற்குள் பல நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திற்கும் ஒரு உருவ அமைப்பு உண்டு. இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு "Constellations" எனப் பெயர். ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் ஒரு உருவ அமைப்பை உடையது எனக் கூறி இருந்தோம். பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு உருவ அமைப்பைக் காட்டுகிறது. ஆனால் இந்த நட்சத்திரங்களெல்லாம் பூமியிலிருந்து சம தூரத்தில் இல்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரத்தில் இருக்கிறது. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே சமதூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. எல்லாமே தோற்றம்தான், உண்மையல்ல!
பூமி தன்னைத் தானே சுற்றுவது நமக்குத் தெரியாததால் இந்த ஆகாயக் கோளம் தினமும் ஒருமுறை நம்மைச் சுற்றுவதைப் போன்ற தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. இந்த ஆகாயக் கோளத்தினுடைய "ஆகாய பூமத்திய ரேகை" (Celestial Equator), பூமியினுடைய பூமத்திய ரேகைக்கு நேராக இருக்கிறது. அதே போன்று ஆகாய வட துருவம் (Celestial North Pole), ஆகாய தென் துருவம் (Celestial South Pole), ஆகியவை பூமியின் வட துருவம், தென் துருவம் ஆகியவற்றிற்கு நேர் எதிராக இருக்கின்றன.
பூமியில் ஒரு இடத்தைக் குறிக்க அல்லது ஒரு ஊரைக் குறிக்க அட்ச ரேகை (Latitude), மற்றும் தீர்க்க ரேகை (Longtitude), தேவையல்லவா?
Latitude-க்கு ஆகாயக் கோளத்தில் "Declination" எனப் பெயர். Longtitude-க்கு ஆகாயக் கோளத்தில் "Right Ascension" எனப் பெயர். இவைகளைச் சுறுக்கமாக ‘Dec’ என்ரும் ‘RA’ என்றும் அழைப்பார்கள். பூமியில் ஒர் இடத்தைக் குறிக்க வட துருவம், மற்றும் தென் துருவம் இவற்றை இணைக்கும் பிரதான ரேகையிலிருந்து, அந்த இடம் எவ்வளவு தீர்க்க ரேகையில் (Longtitude) இருக்கிறது எனப் பார்ப்பார்கள். அந்தப் பிரதான ரேகையானது லண்டன் வழியாகச் செல்லும் ரேகையை 1884-ல் உலக நாடுகள் தேர்ந்தெடுத்துள்ளன. அந்த இடம் பிரதான ரேகையிலிருந்து கிழக்கு அல்லது மேற்காக பிரதான ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறது எனக் கூறுவார்கள். உதாரணமாக சென்னையின் தீர்க்க ரேகை 80017’ (East) என்றால் சென்னையானது லண்டன் வழியாகச் செல்லும் பிரதான ரேகையிலிருந்து கிழக்கே 80-Degrees, 17-Minutes தூரத்தில் இருக்கிறது எனப் பொருள்.
ஆனால் RA என்பது ஆகாய மண்டலத்தின் ஆரம்ப இடமான மேஷத்தி லிருந்து ஓர் இடம் எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக இருக்கிறது எனக் கூறுகிறது. மேற்குப் பக்கம் பார்ப்பது இல்லை. தீர்க்க ரேகையைக் கூறுவது போல் Degree, Minutes, Seconds - ல் இதைக் கூறுவது இல்லை. மணி, நிமிடம், வினாடியில் தான் கூறுவார்கள். ஆகவே ஓர் இடம் கிழக்குப் பக்கமாக அதிகப் படியாக 24-மணி நேரம்தான் இருக்க முடியும்.
ஆனால் Latitude என்று சொல்லுகின்ற அட்ச ரேகைக்கும், ஆகாயக் கோளத்தில் குறிக்கப்படுகின்ற Declination என்கிற ஆகாய அட்சரேகைக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டும் பாகை, கலை, விகலையில்தான் கூறிப்பிடப் படுகிறது.
International Date Line:

நமது பூமியின்மேல் ஒரு மானசீகக் கோடு உள்ளது. அது என்ன தெரியுமா? அதுதான் சர்வதேச தேதி மாறும் கோடு (International Date Line). இந்தக் கோட்டைத் தாண்டும்போது ஒரு நாள் மாறுபடுகிறது. ஆகாய விமானத்தின் மூலமாகவோ அல்லது கப்பல் மூலமாகவோ இந்தக் கோட்டைத் தாண்டும்போது ஒரு நாள் மாறுபடுகிறது. இந்தக் கோடு எங்கு இருக்கிறது தெரியுமா? பசுபிக் மஹாக் கடலில் இருக்கிறது. பிரதான அட்சரேகை லண்டன் வழியாகச் செல்கிறதே, அங்கிருந்து சரியாக 180 வது டிகிரியில் இந்தக் கோடு அமைந்துள்ளது. சைபீரியா, பிஜித் தீவுகள், மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றிற்கு கிழக்குப் பக்கமாகவும், வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவிற்கு மேற்குப் பக்கத்திலும் இக்கோடு வரையப் பட்டுள்ளது. இது எந்த நாட்டுத் தரைவழியாகவும் செல்லாமல் கடல் மேலேயே மானசீகமாக வரையப் பட்டுள்ளது. இக்கோடு நேராக இல்லாமல் வளைந்து, வளைந்து உள்ளது. ஏன் தெரியுமா?
இது எந்த நாட்டின் வழியாகவும் செல்லக் கூடாது என்கின்ற காரணத்தினால், கடலிலேயே செல்ல வேண்டும் என்ற நோக்குடன் வரையப் பட்டு இருப்பதால் நேர்கோடாக இல்லாமல் வளைந்து, வளைந்து இருக்கிறது.
Prime Meridian என்று சொல்லப்படுகிற பிரதான அட்சரேகையிலிருந்து கிழக்கே செல்லச் செல்ல நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை மெலே உள்ள படம் விளக்கி இருக்கிறது பாருங்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் இப்படம் விளக்கி இருக்கிறது பாருங்கள். பிஜித்தீவுகள், மற்றும் நியூசிலாந்தில் திங்கள் கிழமை என்றால் அலாஸ்காவிற்கு ஞாயிற்றுக் கிழமை. ஒருநாள் வித்தியாசப் படுகிறது. இப்போது நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என நமது வாசகர்களுக்குப் புரிந்து இருக்குமென எண்ணுகிறோம்.
இவைகளெல்லாம் ஜோதிடம் பார்ப்பதற்குத் தேவையா? என்று கேட்டால் நாம் "ஆம்" என்றுதான் பதில் சொல்லுவோம். ஜோதிடர்களுக்கு அடிப்படையான வானவியல் தெரிந்திருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதற்காகவே எழுதப்பட்ட பாடமிது.

No comments:
Post a Comment